மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் காரொன்று திடீரென தீப்பற்றி எரிந்தது!!

406

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 53 ஆவது மைல்கல் அருகில் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளான கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து நேற்று புதன்கிழமை (20) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்று பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானதையடுத்து திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து தீயணைப்பு படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.