ஒன்லைன்னில் 45000 ரூபா பொருளை வாங்கிய இளைஞன் கைது!!

1794

அம்பாறை – சம்மாந்துறையில் ஒன்லைன் ஊடாக 45,000 ரூபா பெறுமதியான பொருளை ஓர்டர் செய்து அதற்கான பணத்தினை வழங்காமல் தப்பியோடி இளைஞன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் ஒன்லைன் ஊடாக ஓர்டர் செய்யப்பட்ட பொருளுக்கு பணம் வழங்காமல் தப்பியோடி உள்ளார் என நேற்று முன் தினம் புதன்கிழமை (20.08) பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

அந்த முறைப்பாட்டுக்கு அமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு சம்மாந்துறை 01 பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனை நேற்று (21) கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து ஒன்லைன் ஊடாக ஓ ர்டர் செய்யப்பட்டு பணம் வழங்காமல் கொண்டு சென்ற பொருளையும் சம்மாந்துறை பொலிஸார் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றும் பொருள்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.