வவுனியாவில் துவிச்சக்கரவண்டியில் சென்றவரை மோதிய வாகனம் : ஒருவர் பலி!!

3050

வவுனியா கனகராயன்குளம் கொல்லர்புளியங்குளம் பகுதியில் நேற்று (24.08.2025) மதியம் இடம்பெற்ற விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் பரிதாபமாக சாவடைந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த கென்ரர்ரக வாகனம் கொல்லர்புளியங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபருடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி சாவடைந்துள்ளார்.

சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த முத்து ராமலிங்கம் வயது 61 என்ற குடும்பஸ்தரே சாவடைந்துள்ளார். விபத்து தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.