10ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு!!

459

கொரோனாவுக்கு பின்பான வாழ்க்கை அதிக மன அழுத்தத்தைக் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாணவ, மாணவிகளிடையே மன அழுத்தம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பெங்களூருவில் 10ம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு புறநகர் பகுதியில் வசித்து வருபவர் ராமு. இவரது மனைவி ஷோபா. இவர்களுக்கு 16 வயதில் மகள் ஒருவர் இருந்தார். மகள் வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எஸ்.எஸ்.எல்.சி படித்து வந்தாள்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் தனது பெற்றோருடன் அமர்ந்து ஒன்றாக சேர்ந்து இரவு உணவை சாப்பிட்டு விட்டு தூங்க சென்றாள்.

நேற்று காலை வெகுநேரமாகியும் மகள் எழுந்து வராததால், படுக்கை அறைக்கு சென்று பார்த்த பெற்றோர், மகள் தூக்கில் சடலமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி துடித்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல் துறையினர், மாணவியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, மேற்கொண்டு விசாரித்தனர்.

அப்போது பெற்றோர் தூங்கிய பின்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. மாணவி என்ன காரணத்திற்காக தற்கொலை செய்தார்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.