
வட பகுதிக்கு எடுத்து செல்லப்படவிருந்த கஞ்சா கலந்த 3000 இனிப்புப் பண்டங்களை (டொபி) பண்டாரவளை பகுதியில் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். சிங்கள நாளேடு இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது யாழ் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதுடன், பாடசாலை மாணவர்கள் மத்தியில் இனிப்பு பண்டமாக மாற்றி (டொபி) அறிமுகபடுத்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வட பகுதி இளைஞர்கள் இந்த விடயத்தில் அவதானமாக இருப்பது அவசியமென புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.





