இளைஞரை கன்னத்தில் அறைந்த யுவதி கைது!!

870

Attackகுருணாகல் வாரியபொல நகரில் இளைஞரை கன்னத்தில் அறைந்த யுவதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யுவதியை இன்று வாரிபொல பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸார் அறிவித்திருந்தனர். அவர் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற நிலையில், யுவதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாரிபொல சம்பவத்தில் யுவதியினால் தாக்கப்பட்ட இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யுவதி தாக்கியதன் காரணமாக தனக்கு காது கேட்பதில் குறைப்பாடு ஏற்பட்டுள்ளதாக இளைஞர் கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்ட யுவதி கொழும்பில் தொழில் புரிந்து வருவதாகவும் அவர் இளைஞரை தாக்கிய போது அதனை ஒளிப்பதிவு செய்த நபரை தாம் தேடி வருவதாகவும் வாரியபொல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த சமரதுங்க தெரிவித்தார்.