இலங்கையில் வெவ்வேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி மூவர் உயிரிழப்பு!!

359

இலங்கையில் வெவ்வேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி பெண் ஒருவர் உட்பட மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மொனராகலை – செவனகலை பகுதியில் காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செவனகலை பகுதியைச் சேர்ந்த 24 நபரே உயிரிழந்துள்ளார். புத்தளம் – நவகத்தேகம பகுதியில் காட்டு யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். பொலனறுவை- மெதிரிகிரியை பகுதியில் காட்டு யானை தாக்கி இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மெதிரிகிரியை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.