
தனது மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பர்த்டே கிஃப்ட் தருவது குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தில், தனது பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரத்தில் மனைவியையும்,
மாமியாரையும் கத்திரிக்கோலால் குத்திக் கொடூரமாக கொலைச் செய்த சம்பவம் டெல்லி, ரோஹிணி பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ரோஹணி பகுதியை சேர்ந்தவர் யோகேஷ். இவரின் மனைவி பிரியா (34). நேற்று இவர்களின் மகனுக்கு பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ள பிரியாவின் தாய் குசும் சின்ஹா (63) கடந்த ஆகஸ்ட் 28ம் தேதியன்று அங்கு சென்றுள்ளார்.
நேற்று முன்தினம் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பெறப்பட்ட பரிசுப்பொருட்கள் பற்றி காணவர் யோகேஷ் மனைவி பிரியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவரிடையேயும் வாக்குவாதத்தை தீர்க்க குசும் முயன்றுள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற தாய் வீடு திரும்பாததால் குசும் உடைய மகனும் பிரியாவின் சகோதரனுமான மேக் சின்ஹா போன் செய்துள்ளார்.
அப்போது இந்த வாக்குவதம் குறித்து மகனுக்கு குசும் தெரிவித்துள்ளார். இருப்பினும் அதன் பின் வெகு நேரம் ஆகியும் தாய் வீடுதிரும்பாததாலும், போன் செய்தும் எடுக்காததாலும் மேக் சின்ஹா அங்கு சென்றுள்ளார்.
அங்கு பூட்டிக்கிடந்த வீட்டின் வெளியே ரத்தகரை இருந்துள்ளது. இதை தொடர்ந்து மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது குசும் மற்றும் பிரியா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர்.
இதுதொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து ரத்தம் தோய்ந்த ஆடைகளையும், கத்திரிகோலயும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்து குழந்தைகளுடன் தப்பிச் சென்ற யோகேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.





