இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து!!

510

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்ல – வெல்லவாய பிரதான வீதியில், ரந்தேனிய பகுதியில், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து நேற்று முன்தினம் சனிக்கிழமை (06.09.2025) ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதில் இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.