இலங்கையில் ஜெர்மனி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!!

520

தங்காலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிக்குடாவ விகாரைக்கு அருகே கடற்கரையில் நடந்து சென்ற ஜெர்மனி பெண்ணை அழைத்து சென்று தவறான நடத்தைக்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஜெர்மனி பெண்ணுக்கு நண்டுகளைக் காட்ட கடற்கரையில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி அவரை தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டில் கடற்றொழிலாளர் ஒருவர் தங்காலை பொலிஸ் நிலைய சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர் தங்காலை, பள்ளிக்குடாவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுயடைவராகும். துஷ்பிரயோகத்திற்குள்ளான ஜெர்மன் பெண் மற்றும் சிலர் கடந்த சில நாட்களாக சினிமோதராவின் நகுலுகமுவவில் உள்ள ஒரு சுற்றுலா தலத்தில் தங்கியுள்ளனர்.

தவறான நடத்தைக்கு உள்ளான பெண் தங்காலை, பள்ளிக்குடாவ விகாரை அருகே உள்ள கடற்கரையில் நடைப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

கடற்றொழிலாளர் கடற்கரையில் நடந்து சென்ற ஜெர்மன் பெண்ணை அணுகி, தான் ஒரு கடற்றொழிலாளர் எனவும் நண்டுகளைப் பார்க்க விரும்பினால், வருமாறு கடற்கரையில் ஒரு இடத்திற்கு அழைத்து சென்று, அங்கு தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

அந்தப் பெண் அவரிடமிருந்து தப்பித்து 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்குத் தகவல் வழங்கியுள்ளார். அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.