
வயதைக் காரணம் காட்டி காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரித்து வந்த நிலையில், குடும்ப பிரச்சினைகளையும், காதல் விவகாரத்தையும் காரணம் காட்டி மாணவியை அவரது தாயார் திட்டியுள்ளார்.
இதில் மனமுடைந்த கல்லூரி மாணவி சேலையால் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகள் ரக்ஷனா (17). சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.சி.ஏ. படித்து வந்த இவர், அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரைக் காதலித்து வந்ததாக தெரிகிறது.
இவர்களது வயதை காரணம் காட்டி இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக தெரிகிறது.
ரக்ஷனாவின் பெற்றோர் கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், குடும்ப பிரச்சினைகளையும், காதல் விவகாரத்தையும் காரணம் காட்டி ரக்ஷனாவை அவரது தாயார் திட்டி வந்ததாக தெரிகிறது.
இதனால் விரக்தி அடைந்த ரக்ஷனா, நேற்று முன்தினம் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்ததும் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ரக்ஷனா ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக வீட்டை விட்டு வெளியேறியதுடன்,
எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.





