காதலர்களுக்குள் தகராறு அடுத்தடுத்து இருவரும் எடுத்த விபரீத முடிவு!!

395

“இனி நீ எனக்கு தேவையில்லை.. நான் உன்னை பார்க்க மாட்டேன். உன்னோடு பேசமாட்டேன், நான் உன்னை காதலிக்க மாட்டேன்” என்று இளம்பெண்ணிடம் காதலன் கூறி, தன்னுடைய காதலை கைவிட்டதால்,

மன உளைச்சலில் இருந்து வந்த 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பூபதி (21). இவர் அதே பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 11ம் தேதி பூபதிக்கும், மாணவிக்கும் தகராறு ஏற்பட்டு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மாணவி, “இனிமேல் எனக்கு நீ தேவையில்லை.

நான் உன்னை பார்க்க மாட்டேன். உன்னோடு பேசமாட்டேன் நான் உன்னை காதலிக்க மாட்டேன்” என்று கூறியதாக தெரிகிறது. இதில் மன உளைச்சலில் இருந்த பூபதி கடந்த 11-ந்தேதி இரவு 7 மணி அளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தன்னால் தான் பூபதி தற்கொலை செய்து கொண்டார் என மாணவி மனஉளைச்சலில் இருந்து வந்த நிலையில், நேற்று அதிகாலை மாணவியின் பெற்றோர் எழுந்து பார்க்கும் போது மாணவி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் கத்தி கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று அவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர், மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற ஸ்ரீபெரும்புதூர் போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.