
இலங்கையைச் சேர்ந்த பொலிவூட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் மனுவை இந்திய உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் வழக்கிலிருந்து தன்னை நீக்க வேண்டும் என்று கோரி ஜாக்குலின் பெர்னாண்டஸ் மனு சமர்ப்பித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த மனுவை பரிசீலித்த இந்திய உயர் நீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளது.

இது போன்ற நிவாரணம் பெற இது சரியான நேரம் அல்ல என்றும் கூறி அவரது வழக்கில் தலையிட இந்திய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது மிரட்டி பணம் பறித்ததற்கான முக்கிய குற்றச்சாட்டு எதுவும் இல்லை என்றும், அவர் பணமோசடி செய்ததாக எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸின் சட்டத்தரணி வாதிட்டுள்ளார்.
இருப்பினும், இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், அவருக்கு எதிரான விசாரணை தொடரும் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை, முன்னதாக குறித்த வழக்கு தொடர்பில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தாக்கல் செய்த மனுவை டெல்லி மேல்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





