தங்காலையில் மீ்ட்கப்பட்ட இரு சடலங்கள் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

528

தங்காலை, சீனிமோதரவில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட வீட்டில் மர்மமான முறையில் இறந்தவர்கள், அளவுக்கு அதிகமாக மதுபானம் மற்றும் ஹெரோயினை உட்கொண்டதால் இறந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இறந்தவர்களின் உடல்களின் பிரேத பரிசோதனையை தங்காலை மருத்துவமனையின் தடயவியல் அதிகாரி ருவன் நாணயக்கார நடத்தினார். அந்த நபர்கள் அளவுக்கு அதிகமாக மதுபானம் மற்றும் ஹெரோயின் உட்கொண்டதால் இறந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை தடயவியல் மருத்துவ அதிகாரி தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் முன்வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தங்காலை சீனிமோதர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்றுமுன்தினம் (22.09.2025) மர்மமான முறையில் இறந்த இரண்டு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

குறித்த வீட்டில் இருந்த மற்றொரு நபரும் ஆபத்தான நிலையில் தங்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், மூன்று லொறிகளில் படிக மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) மற்றும் ஹெரோயின் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளில், சம்பந்தப்பட்ட போதைப்பொருள் தொகை ‘உனகுருவே சாந்த’ என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. அவர் பல குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.