
தொடருந்தில் மோதி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு – கோட்டை நோக்கிப் பயணித்த தொடருந்தில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் சிராவஸ்திபுர தொடருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று (26.09.2025) அதிகாலை ஒரு மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 57 வயதுடைய கண்டி பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





