
ராஜஸ்தான் மாநிலத்தில் பச்சிளம் குழந்தையை காட்டில் கைவிட்டு சென்ற தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா வனப்பகுதியில் பிறந்து 19 நாளே ஆன பச்சிளம் குழந்தை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண் ஒருவருடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக இந்த குழந்தை பிறந்ததால், குழந்தையை தாய் காட்டில் கைவிட்டதாக தெரியவந்துள்ளது.
சமூக அவமானத்துக்கு பயந்து குழந்தையின் தாயும் அவரது தந்தையும் பண்டி பகுதியில் தனியாக வீடு ஒன்று வாடகை எடுத்து பிரசவத்தை முடித்துள்ளனர்.
இதையடுத்து பிறந்து 19 நாளே ஆன குழந்தையை பில்வாரா பகுதியில் கைவிட்டதோடு குழந்தை அழுது கத்தி பிறரின் கவனத்தை பெறாமல் இருக்க குழந்தையின் வாயில் கை திணக்கப்பட்டு உதடுகள் பசையால் ஒட்டப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக ஆடு மேய்ப்பவர் ஒருவர் குழந்தை மீட்கப்பட்ட நிலையில் குழந்தையின் தாயும், குழந்தையின் தாய்வழி தாத்தாவும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸார் விசாரணையில், பிறந்த குழந்தையை முதலில் விற்கவும் முயற்சித்து இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட தாய்க்கும், குழந்தைக்கும் இடையிலான உறவை உறுதிப்படுத்த டிஎன்ஏ பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட குழந்தை தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.





