துர்க்கை அம்மன் சிலையை கரைக்கச் சென்றபோது 11 பக்தர்கள் பலி!!

974

மத்தியப்பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் விஜயதசமியை முன்னிட்டு துர்கா சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்த வழிபாடுகள் அனைத்தும் முடித்து சிலைகள் ஆங்காங்கே நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கந்த்வா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த துர்கா சிலைகளை பக்தர்கள் டிராக்டர் ஒன்றில் எடுத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள ஏரியில் கரைப்பதற்காகச் சென்றிருந்தனர்.

அதன் படி டிராக்டர் அந்த ஏரியை அடைந்தபோது திடீரென சிலைகள் வைக்கப்பட்டிருந்த டிராலி ஏரியில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் துர்கா சிலைகளுடன் பக்தர்களும் அந்த ஏரிக்குள் விழுந்து மூழ்கினர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். அவர்கள் 6 பக்தர்களை உயிருடன் மீட்டனர்.

ஆனால் 11 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து வேறு யாரும் நீரில் மூழ்கி உள்ளனரா? என தீவிரமாக சிகிச்சைக்காக தேடபட்டு வருகின்றனர்.

இச்சம்பவத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். துர்கா சிலை கரைப்புக்காக சென்ற பக்தர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.