3 வயது மகளை பட்டினி போட்டு கொலை செய்த பெற்றோர் : அதிர்ச்சி வாக்குமூலம்!!

595

இங்கிலாந்து நாட்டின் ஹயேஸ் பகுதியில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் மன்பிரீத் ஜாதனா , ஜஸ்கிரெத் சிங் உப்பல் .

34 மற்றும் 36 வயதான இவர்கள் தங்களது 3 வயது மகளான பெனலோப் சந்திரீயுடன் வசித்து வந்தனர். இந்த குழந்தை 2023ல் டிசம்பர் 17ம் தேதி மாலையில் வீட்டிலேயே உயிரிழந்து உள்ளது.

இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் பெனலோப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், ஊட்டச்சத்து குறைபாட்டால் பெனலோப் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

இது குறித்து நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், பல மாதங்களாக பெனலோப்பை அந்த தம்பதி பட்டினியாக போட்டிருந்ததாக அதிர்ச்சி தரும் தகவல்கள் தெரியவந்தன.

பல ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணை முடிவில், ஜாதனா மற்றும் உப்பல் தம்பதியை போலீசார் கைது செய்து குற்றச்சாட்டு அறிக்கையையும் பதிவு செய்தனர்.

3 வயது மகளை அவர்கள் பட்டினி போட்டு கொலை செய்த குற்றச்சாட்டு அவர்கள் மீது சுமத்தப்பட்டு உள்ளது. இது குறித்து அடுத்த கட்ட விசாரணை நடத்தவும் முடிவாகி உள்ளது. இதற்கான உத்தரவை நீதிபதி லின் டெய்டன் பிறப்பித்து உள்ளார்.