யாழில் 208 பவுண் தங்க நகைகள் கொள்ளை : திருமண வீட்டில் திருடர்கள் கைவரிசை!!

568

Kollai

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் 200 பவுண் நகையும் பெருந்தொகை பணமும் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வீட்டில் நேற்று திருமண வைபவம் இடம்பெற்றிருந்த நிலையில் இன்று அதிகாலை வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் நகைகள் உட்பட 200 பவுண் நகை களவு போயுள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்கு மோப்ப நாய்களுடன் இன்று காலை வந்த பொலிஸார், விசாணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.