
ஹட்டனில் இரண்டு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் உந்துருளிகளின் சாரதிகள் இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் கொட்டகலை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை காவல்துறையினர் தெரிவித்தனர்.
தலவாக்கலையிலிருந்து ஹட்டன் நோக்கியும், ஹட்டனில் இருந்து கொட்டகலை நோக்கியும் பயணித்த இரண்டு உந்துருளிகளும் ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் இரு உந்துருளிகளும் பலத்த சேதமடைந்துள்ளன. மேலும் குறித்த விபத்து தொடர்பில் திம்புள்ள பத்தனை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





