மனைவி மற்றும் குழந்தைகள் முன்னிலையில் கைதான ‘பஸ் லலித்’ : வெளியான பின்னணி!!

436

இலங்கையில் இருந்து தப்பிச் சென்று பல ஆண்டுகளாக டுபாயில் தலைமறைவாகியிருந்த பாதாள உலகக்குழு உறுப்பினரான ‘பஸ் லலித்’ நேற்றையதினம்(14.10.2025) கைது செய்யப்பட்டிருந்தார்.

டுபாயில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இருந்த போதே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், டுபாய் பொலிஸார் அவர்களை கைது செய்யவில்லை. கைது செய்யப்பட முன்னர், அவர் தனது சக ஊழியர்களுக்கு விருந்தொன்றையும் ஏற்பாடு செய்துள்ளார்.

பஸ் லலித்தின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள், சில மாதங்களுக்கு முன்பு டுபாய் சென்று அவருடன் தங்கியிருந்துள்ளனர்.

இதேவேளை, பஸ் லலித், அவிசாவளை, ஹன்வெல்ல உள்ளிட்ட பல பகுதிகளில் பல கொலைகளுக்குத் தலைமை தாங்கியதாகவும், தொழிலதிபர்களை மிரட்டி இலட்சக்கணக்கில் பணம் பறித்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.