நடிகை பியுமியின் கிறீம் தொடர்பில் சீ.ஐ.டி விசாரணை!!

376

பிரபல நடிகை மற்றும் மாடல் அழகியுமான பியுமி ஹன்சமாலிக்கு சொந்தமான லோலியா ஸ்கின் கம்பெனி என்ற கிரீம் உற்பத்தி நிறுவனம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் கிரீம் வகையின் தரம் மற்றும் ஆரோக்கிய நிலை தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்ற புலனாய்வு திணைக்களம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசாங்க ரசாயன பகுப்பாய்வு நிறுவனத்திற்கு இந்த விசாரணையை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

குற்ற புலனாய்வு திணைக்களத்தின் திட்டமிட்ட குற்றச் செயல் பிரிவின் கீழ் இயங்கும் சட்டவிரோத சொத்துக் குவிப்பு பிரிவினால் பியுமியின் கிரீம் உற்பத்தி நிறுவனம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கிரீம் வகைகள் தர நிர்ணயங்களுக்கு உட்பட்டதா என்பதை நிர்ணயம் செய்வதற்கு அனுமதி அளிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் கிரீமின் தரம் குறித்தும் அது அதன் பாதுகாப்பு தன்மை குறித்தும் சோதனை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

பிரபல நடிகை பியும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுடன் நெருங்கி பழகி, குறுகிய காலத்தில் பெருமளவு சொத்துக்களை குவித்துள்ளதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.