
புத்தளத்தில் ஆனமடு – நவகத்தேகம் வீதியில் பொத்திக்கட்டுவ கால்வாய்க்கு அருகில் உள்ள பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று சனிக்கிழமை (18) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சொகுசு பஸ் ஒன்று காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது சொகுசு பஸ்ஸின் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





