லொறி மீது பாரிய மரமொன்று முறிந்து விழுந்தது!!

313

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்பாக பயணித்த லொறி ஒன்றின் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (23.10.2025) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றின் மீதே மரம் முறிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறிருப்பினும் இந்த விபத்தின் போது எந்தவித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.