சவுதி அரேபிய பாலைவனத்தில் சிக்கிய இந்தியர் : நாடு திரும்ப உதவுங்கள் என கண்ணீர் கோரிக்கை!!

321

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பகிர்ந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியதால் இந்திய தூதரகம் கவனத்திற்கு சென்றுள்ளது.

இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசம், ஹாண்​டியா பகு​தி​யைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சவுதி அரேபியாவில் உள்ள பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் வேலை பார்த்து வருகிறார்.

தான் பார்க்கும் வேலை சிரமமாக இருப்பதால் மீண்டும் தாய் நாட்டிற்கே திரும்ப முடிவு செய்துள்ளார் அந்த இளைஞர். ஆனால், அவரது முதலாளி அவரது பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டு கொன்று விடுவதாக மிரட்டுவதாகவும் இளைஞர் கூறியுள்ளார்

டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பகிர்ந்து கொண்ட காணொளியில், போஜ்புரி மொழியில் பேசும் இந்த நபர் பிரதமர் நரேந்திர மோடியிடம் உதவி கோருகிறார்.

அந்த வீடியோவில் இளைஞர் கூறுகையில், “எனது கிராமம் அலகா​பாத். நான் சவுதி அரேபியாவில் வேலை பார்க்க வந்துள்ளேன்.

ஆனால், நான் நாடு திரும்ப நினைப்பதால் என்னுடைய முதலாளி பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டு கொன்று விடுவதாக மிரட்டுகிறார்.

எனக்கு பிரதமர் நரேந்திர மோடி​யும், வெளி​யுறவுத்​துறை அமைச்​சரும் உதவ வேண்​டும். இல்​லை​யென்​றால் நான் இறந்​து விடுவேன்” என்கிறார்.

இந்த வீடியோ வைரலாகி பரவலான கவனத்தைப் பெற்றதால், சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் அந்த நபரைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதாகக் கூறியது.

இந்​திய தூதரகம் விடுத்​துள்ள செய்​தி​யில், “அந்த நபரைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம். சவுதி அரேபியாவின் இருப்பிடம்/மாகாணம் பற்றிய எந்த விவரங்களோ, தொடர்பு எண் அல்லது முதலாளியின் விவரங்களோ வீடியோவில் இல்லை” என்று தெரிவித்துள்ளது.