இலங்கையில் தடுமாறும் தங்கத்தின் விலை : இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!!

882

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து வருகின்றன. நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இலங்கையில் இன்று (06 நவம்பர் 2025) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 316,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 290,000 ரூபாயாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 237,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,525 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 36,250 ரூபாயாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 29,625 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்தமையினால் இலங்கையிலும் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரிப்பை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.