இலங்கை வந்த சுற்றுலா பெண்ணிடம் மிகவும் மோசமாக செயற்பட்ட நபர்!!

757

இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டுப் சுற்றுலாப் பெண் பயணி ஒருவருக்கு நிகழ்ந்த மோசமான சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்படவுள்ளார். குறித்த பெண் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி சுற்றுலா சென்றிருந்தபோது தன்னை அணுகிய ஒரு இளைஞர் தகாத செயலில் ஈடுபட்டதாக கூறி பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இந்தச் சம்பவத்தின் வீடியோவையும் அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார்.

பெண்ணை அணுகிய ஒருவர் தனது அந்தரங்க உறுப்புகளைக் வெளிப்படுத்தி, தகாத உறவுக்கு வருமாறு அழைக்கும் வகையில் அமைந்திருந்தது.

இந்த மோசமான சம்பவம் பொத்துவில் பகுதியிலுள்ள அருகம் விரிகுடா பகுதியில் பதிவாகி உள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

சந்தேக நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.