இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்!!

419

இலங்கையில் நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது இன்று தங்கத்தின் விலையில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 44,260 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் 354,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்க கிராம் 40,580 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் 324,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 38,730 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 309,850 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது.

அதனடிப்படையில், இன்றைய (17.11.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,254,650 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.