துணிச்சலுடன் 2 மணி நேரம் நீந்தி ஆற்றை கடந்து குழந்தை பெற்றெடுத்த அதிசயப் பெண்!!(வீடியோ)

977

Lady

கர்நாடக மாநிலத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக தொடர்ந்து 2 மணி நேரம் நீந்தி ஆற்றை கடந்துள்ளார். கர்நாடகாவில் யாதகிரி மாவட்டத்தில் சுராப்பூர் என்னுமிடத்தின் அருகே நீலகண்ட நாராயணகட்டி என்னும் கிராமம் உள்ளது. மாராத்தி மொழி பேசுவோர் வாழும் இக்கிராமத்தை சேர்ந்தவர் கட்டி பாலப்பா. இவரது மனைவி எல்லவ்வா (22).

9 மாத‌ கர்ப்பிணியாக இருந்த எல்லவ்வா அவர் வசித்த பகுதியில் கடும் மழை பொழிந்ததையும் பொருட்படுத்தாமல் தனது பிரசவத்திற்காக 16 அடி ஆழமுள்ள கிருஷ்ணா ஆற்றில் கயிறு மற்றும் சுரைக்குடுவையை கட்டிக்கொட்டு துணிச்சலுடன் குதித்துள்ளார்.

இவர் 700 மீற்றர் நீளமுள்ள ஆற்றை சுமார் 120 நிமிடங்கள் மூச்சிறைக்க‌ நீந்தி கடந்துள்ளார்.

இதுகுறித்து இவர் கூறுகையில், எனக்கு அவ்வளவாக நீச்சல் தெரியாது என்றும் நீந்தும்போது கடவுளையும் கணவனையும் மனதில் நினைத்துக்கொண்டு, எனது தம்பி மற்றும் தந்தையின் உதவியுடன் ஆற்றை கடந்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது அறுவை சிகிச்சை மூலம், அவர் அழகிய ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.