வவுனியா திருநாவற்குளத்தில் வட மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் அவர்களினால் பேரூந்து தரிப்பு நிலையம் திறந்து வைப்பு!!(படங்கள்)

622

வவுனியா திருநாவற்குளத்தில் அமைந்துள்ள பார ஊர்தி தரிப்பு நிலையத்திற்கு முன்னால் இன்று (03.09) காலை 10.30 மணியளவில் அமரர் தர்மலிங்கம் தேவராஜா (இளங்கோ) அவர்களின் ஞாபகார்த்த பேரூந்து தரிப்பு நிலைய திறப்பு விழா, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) முக்கியஸ்தர் திருமதி.சோதிமதி நகுலேஸ்வரம்பிள்ளை தலைமையில் நடைபெற்றது

இன் நிகழ்வில்முன்னாள் வவுனியா நகரசபையின் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் அழைப்பின் பெயரில், வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வட மாகாண சபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் வன்னி மாவட்ட இணைப்பாளர் திரு க.சிவநேசன் (பவன்) மற்றும் கௌரவ விருந்தினர்களாக குருமன்காடு பொலிஸ் அதிகாரிகள், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் திரு இராஜசேகரம் (சேகர்), வெங்கலசெட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர் திரு ஜெகதீஸ்வரன் (சிவம்), ஈரோஸ் அமைப்பின் செந்தில், தமிழீழ மக்கள் விடுதலைக்கழக உறுப்பினர்கள், பொதுமக்கள், இளைஞர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டார்கள்.

இந் நிகழ்வில் உரையாற்றிய தர்மலிங்கம் சித்தார்த்தன், இன்று எமது அபிவிருத்திகள் பன்முகப்படுத்தப்பட்டு, பல வழிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எமது மறைந்த தோழர் இளங்கோ எமது அமைப்பின் வளர்ச்சியிலும், மக்கள் பணிகளிலும் என்றும் பின் நின்றதில்லை. அவரின் ஞாபகார்த்தமாக இன்று இவ் பேரூந்து தரிப்பு நிலையம் மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

இன்று தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக வட மாகாண சபையில் 30 ஆசனங்கள் எமக்கு இருக்கின்றது, இது தனிப்பட்ட நபருக்கோ அல்லது கட்சிக்கோ கிடைத்த வெற்றி இல்லை, தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை வன்னியில் தலைநிமிர வைக்க வேண்டுமானால் நாம் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

IMG_2754 IMG_2758 IMG_2766 IMG_2768 IMG_2771 IMG_2776 IMG_2785