தொல்லை தாங்க முடியவில்லை : கல்லூரி மாணவி எலி பேஸ்ட் சாப்பிட்டு விபரீத முடிவு!!

21

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே சின்ன மூக்கனூர் பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார்–மலர் தம்பதியினரின் மகள் வினிஷ்கா (19), பர்கூர் பகுதியில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

பள்ளி நாட்களிலிருந்தே அதே பகுதியைச் சேர்ந்த மாதேஷ் (19) என்ற இளைஞருடன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் பெற்றோர் திருமணம் பேசத் தொடங்கிய நிலையில், வினிஷ்கா காதலை கைவிட்டதாகவும் தெரிகிறது

இதன் பின்னர் விரக்தியடைந்த மாதேஷ், அடிக்கடி வினிஷ்காவின் வீட்டருகே வந்து தொல்லை கொடுத்து ‘லவ் டார்ச்சர்’ செய்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வினிஷ்கா,

15ஆம் தேதி வீட்டில் இருந்த எலி பேஸ்ட் உண்டதால் உணர்விழந்தார். உடனே அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கும் பின்னர் தனியார் மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. ஆனால் இன்று உயிரிழந்தார்.

இளம்பெண் மரணத்திற்கு காரணமான மாதேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிய உறவினர்கள், ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காததை எதிர்த்து வாணியம்பாடி – திருப்பத்தூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று, புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியல் கலைக்கப்பட்டது.