12 வயது சிறுமியை மிரட்டி கர்ப்பமாக்கிய சந்தேகநபர் கைது!!

716

Abuse

12 வயதும் 6 மாதமும் நிரம்பிய சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கர்ப்பிணியாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏத்கால- ஆலங்குடா பகுதியைச் சேர்ந்த சிறுமியே அதே பிரதேசத்தைச் சேர்ந்த நபரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சிறுமி வீட்டில் தனிமையில் இருந்த வேளை அவரை மிரட்டி சந்தேகநபர் வல்லுறவு புரிந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பமான நிலையில் கல்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.