வவுனியாவில் 5000 ரூபா கள்ள நோட்டுடன் பெண் கைது!!

822

5000

வவுனியாவில் 5000 ரூபா கள்ள நோட்டுடன் பெண் ஒருவரைத் தாம் கைது செய்துள்ளனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் இருந்து பஸ்ஸில் வவுனியாவுக்கு வந்து அங்கிருந்து புத்தளம் பஸ்ஸில் ஏறி பயணித்துள்ளார் குறித்த பெண். பஸ் மதவாச்சிப் பகுதியில் உள்ள கடை ஒன்றில் நிறுத்தப்பட்டது. இதன்போது இந்தப் பெண் அங்கிருந்த பழக்கடை ஒன்றில் 5000 ரூபா பணத்தைக் கொடுத்து பழங்களை வாங்கியுள்ளார்.

பணத்தை அவதானித்த கடை உரிமையாளர், அது போலி நாணயத்தாள் என இனங்கண்டு, பெண்ணை மறித்து வைத்துக் கொண்டு பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் குறித்து பெண்ணை கைது செய்தனர். கைதானவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்றும் வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.