கொள்ளுப்பிட்டியில் பேரூந்து – கார் மோதி விபத்து!!

197

கொழும்பு – கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் பஸ் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று புதன்கிழமை (26) இடம்பெற்றுள்ளது. விபத்தில் காரில் பயணித்த ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ் சாரதியின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.