உயிரை காக்க மரத்திலேறிய நபர் : ஒரு நாள் முழுவதும் தவித்த நிலையில் மீட்பு!!

176

இலங்கை நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களை பெல் 212 ரக ஹெலிக்கொப்டர் மூலம் இலங்கை விமானப்படையினர் மீட்டு வருகின்றனர்.

அந்த வகையில், அனுராதபுரத்தின் அவுக்கன பகுதியில் கலாவெவ வெள்ளப்பெருக்க்கில் நேற்று (27.11.2025) மாலை முதல் தென்னை மரத்தின் மேல் சிக்கித் தவித்த ஒருவர் இன்று (28.11.2025) மீட்கப்பட்டுள்ளார்.

ஹிங்குராக்கொட விமானப்படைத் தளத்தின் 7வது படைப்பிரிவைச் சேர்ந்த பெல் 212 ஹெலிக்கொப்டர் மூலம் விமானப்படையின் மீட்பு குழுவினர் மீட்டனர். மேலும் மன்னம்பிட்டிய பாலத்தில் சிக்கி 06 பேரையும் மீட்பதற்கான நடவடிக்கையும் மேற்கொண்டனர்.