ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒழித்துக்கட்ட ஒபாமா சபதம்!!

676

Obama

சமகாலத்தில் கொடூர தீவிரவாத அமைப்பாக உருவெடுத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை ஒழித்துக் கட்டப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சூளுரைத்துள்ளார்.

ஈராக்கின் சில பகுதிகளையும், சிரியாவில் கைப்பற்றப்பட்ட பகுதியையும் ஒருங்கிணைத்து இஸ்லாமிய நாடு என்று பிரகடனப்படுத்திய தீவிரவாதிகள், அதனை விஸ்தரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐ.எஸ்.தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை மீட்க குர்திஷ் படையினர் போராடி வருகின்றனர். அதற்கு உதவும் வகையில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள் அமெரிக்காவை சேர்ந்த பத்திரிக்கையாளர்களான ஸ்டீவன் ஸ்காட்லாப் (Steven Scotlaff) மற்றும் ஜேம்ஸ் போலே (Jmaes Polo) ஆகியோரை சிறைப்பிடித்திருந்த நிலையில், அவர்களை சிரச்சேதம் செய்து கொலை செய்துள்ளனர்.

ஸ்காட்லாப்பின் தலையை துண்டித்த தீவிரவாதி, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை எச்சரிக்கும் தோனியில் பேசியிருந்தார்.
இந்நிலையில் ஸ்காட்லாப் கொல்லப்பட்ட காணொளியை ஆய்வு செய்த அமெரிக்க தடவியல் துறை அதிகாரிகள் அது உண்மையானது தான் என தெரிவித்தனர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, எங்கள் நாட்டை சேர்ந்த இரு நல்ல இளைஞர்களை கொன்றதற்காக மட்டும் ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க முடிவெடுக்கவில்லை. ஒட்டுமொத்த அமெரிக்க பிராந்தியத்திற்கும், ஈராக் நாட்டிற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ள அவர்களை அழிக்க வேண்டியது உலக நன்மைக்கு நல்லது என்று கூறியுள்ளார். தீவிரவாதிகள் எங்களை அச்சுறுத்தலாம் என்று நினைத்தால் தோற்றுப்போவார்கள்.

மேலும் அச்சுறுத்தல் வரும் போது தான் எங்கள் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள். எனவே தீவிரவாதிகளை ஒழிப்பது உறுதி என ஒபாமா தெரிவித்துள்ளார்.