
குருநாகல் – ஹெட்டிபொல பகுதியில் சீரற்ற வானிலை காரணமாக சேதமடைந்த மின்சார அமைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை மின்சார சபையின் ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
போவத்த – வீரபோகுன பகுதியில் ஏற்பட்ட இடிபாடுகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது நேற்று (03.12.2025) மதியம் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
வீரபோகுண ஆதார மருத்துவமனையிலும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குளியாப்பிட்டி போதனா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவர் இறந்துள்ளார்.

2007ஆம் ஆண்டு தம்புள்ளையில் சாதாரண ஊழியர் ஒருவராக பணிக்கு சேர்ந்த 41 வயதான அனுருத்த குமார, பத்து ஆண்டுகள் அங்கு ஊழியராகப் பணியாற்றிய பின்னர் 2017 ஆம் ஆண்டு உக்குவெல மின் உற்பத்தி நிலையத்திற்கு நிரந்தர ஊழியராக மாற்றப்பட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டு முதல் அவர் ஹெட்டிபொல மின் நிலையத்தில் மின்சார ஊழியராக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.





