
திருகோணமலை – முள்ளிப்பொத்தானை 8ம் குளனியை சேர்ந்த சிறுவன் தான் சேமித்த உண்டியலை உடைத்து வெள்ள நிவாரண நிதிக்காக பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்துள்ளார்.
மாஹில் முஆத் என்ற 7 வயதுடைய சிறுவனே வெள்ள நிவாரண நிதிக்காக 1184 ரூபாவை கொடுத்துள்ளார்.

சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்ட பலருக்காக பல இடங்களில் உலர் உணவுப் பொதிகள் உட்பட அத்தியவசிய பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இவ்வாறான உதவி பெரிதும் பாராட்டத்தக்கதாக கருதப்படுகிறது.





