
அண்மையில் ஏற்ப்பட்ட வெள்ளப்பேரிடரால் உயிரிழந்த பொதுமக்களுக்கு வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பூந்தோட்டம் வர்த்தகர் சங்கம், சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பு, அற்புதமான இதயம் அமைப்பு ஆகியவையால் குறித்த நிகழ்வு ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் உயிரிழந்தவர்களின் நினைவாக அகவணக்கம் செலுத்தப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக நிவாரண பொருட்களும் சேகரிக்கப்பட்டது.






