தன்னை விட அழகாக இருந்ததாக 6 வயதுச் சிறுமியை கொலை செய்த பெண்!!

44

ஹரியானா மாநிலம் பானிபட் அருகே உள்ள நவுதலா கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த திருமண விழாவில், 6 வயது சிறுமி வித்தி மகிழ்ச்சியாக அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்.

அழகான ஆடை அணிந்திருந்ததால், பலரின் கவனமும் அவர்மீதே இருந்தது. ஆனால் சில நேரங்களில், அந்த சிறுமி காணாமல் போனது பெற்றோரையும் உறவினர்களையும் பதட்டத்தில் ஆழ்த்தியது.

இதனைத் தொடர்ந்து திருமண வீட்டை முழுதும் தேடியும், சிறுமி எங்கும் கண்ணில் பட்டதில்லை. இறுதியில், வெளிப்புறமாக பூட்டியிருந்த முதல் தள அறை திறக்கப்பட்டபோது,

தண்ணீர் வாளிக்குள் முகம் கீழ்வைத்து விழுந்த நிலையில் இருந்த வித்தி அசைவின்றி கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் மகிழ்ச்சியில் இருந்த வீடு முழுவதும் சோகத்தில் மூழ்கியது.

இந்த சம்பவத்தை விசாரணை ஹரியானா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டனர். மேலும் சம்பவம் நடத்த இடத்தில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுமி கடைசியாக உறவுக்கார பெண் பூனத்துடன் சென்றது தெரியவந்தது.

அப்போது கடைசியாக குழந்தையுடன் அவரது உறவுக்கார பெண் இருந்தது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணைக்காக அழைக்கப்பட்ட பூனத்தை அழைத்துச் சென்றனர். அப்போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.

2019-ல் திருமணமான 34 வயதான பூனம், இரு குழந்தைகளின் தாயான பின்னரும், தன்னை மிகுந்த அழகி என்று நினைத்து, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் அனைவரின் பார்வையும் தன் மீது இருக்க வேண்டும் என்ற மனநிலையிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த திருமண நிகழ்ச்சியில் சிறுமி வித்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது பூனத்திற்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளார். இதற்காக, தனியாக அழைத்து சென்று தண்ணீர் வாளியில் தள்ளி மூழ்கடித்து தாக அவர் ஒப்புக்கொண்டு பரபரப்பு வாக்கு மூலத்தை அளித்தார்.

இதிலும் அதிர்ச்சி என்னவென்றால் முன்னதாக இதே காரணத்தால் முன்று பேரை கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி
கடந்த 2023-ல் மைத்துனியின் 9 வயது மகள் இஷிகாவையும், அதை பார்த்து பயந்த தனது 4 வயது மகனையும் தண்ணீரில் தள்ளி கொன்றதாக தெரிவித்துள்ளார்.

மேலும், 2025-ல் மற்றொரு 6 வயது உறவுக்கார சிறுமியையும் இதே முறையில் கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இவரது குடும்பத்தினர் அனைத்தும் இதுவரை விபத்து மரணமாகவே நினைத்த நிலையில், பூனம் சீரியல் கில்லராக இருப்பது தெரிய வந்ததும், குடும்பத்தினரே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

6 வயது வித்தி கொலை வழக்கிலிருந்து தொடங்கி, பூனம் முன்பே பல கொலைகளை செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. இந்த சம்பவம் ஹரியானா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.