இந்தியாவில் கோர விபத்து : பேருந்து கவிழ்ந்ததில் 9 பேர் பலி!!

10

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் இன்று (12) காலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அல்லூரி மாவட்டத்தில் உள்ள ஒரு மலைப் பகுதியில் பயணித்த பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சரிவில் கவிழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் பல உதவியாளர்கள் உட்பட 35 பேர் இருந்தனர்.

காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து, ஒரு வளைவில் பயணித்துக் கொண்டிருந்தபோது வீதியை விட்டு விலகி விபத்தில் சிக்கியுள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் கடும் மூடுபனி இருந்ததாகவும், இதன் விளைவாக, பேருந்து ஓட்டுநருக்கு விபத்து நடந்த இடத்தில் ஒரு வளைவைப் பார்க்க முடியாமல் போயிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க முடிவு செய்துள்ளார்.

காயமடைந்தவர்களுக்கு உள்ளூர் பணத்தில் 50,000 ரூபாய் வழங்கவும் இந்திய அரசு முடிவு செய்துள்ளது.