ஜனாதிபதிக்கே ஐஸ் பக்கெட் சலஞ்ச் விடுத்த சிறுவன்!!

643

Iceபெலாரூஸ் நாட்டின் ஜனாதிபதிக்கு, சிறுவன் ஒருவன் ஐஸ் பக்கெட் சவாலை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமித்திரி டேநெக்கோ (Thimithri Denoko) என்ற சிறுவன் ஐஸ் பக்கெட் சவாலில் ஈடுபட்டு, ஜனாதிபதிக்கு சவால் விடும் காட்சி அடங்கிய காணொளி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறுவன், இளைஞர் அலுவலகத்திற்கும், பாடசாலைக்கும் அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டதாக ஊடகங்கள் அறிவித்துள்ளன.

இந்த காணொளி நீக்கப்படாத பட்சத்தில் அதனுடன் சம்பந்தப்பட்ட சகலரும் தண்டிக்கப்படுவார்கள் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.