அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணகொடுப்பனவு : வெளியான அறிவிப்பு!!

1162

அரச அதிகாரிகளுக்கு அடுத்த ஆண்டுக்காக 4,000 ரூபாயிற்கு மிகாத விசேட முற்பணத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அலோக பண்டார  வெளியிட்ட சுற்றறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையின்படி, அரச ஊழியர்களுக்கு 4,000 ரூபாய் வரை சிறப்பு முற்பணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சிறப்பு வங்கிக் கடன்கள் அல்லது முன்னர் பெறப்பட்ட சிறப்பு முன்பணங்களுக்கான தவணைகளை திருப்பிச் செலுத்தத் தவறிய எந்தவொரு அரசு அதிகாரிக்கும் இந்தக் கொடுப்பனவு பொருந்தாது என்று சுற்றறிக்கை தெளிவுபடுத்துகிறது.

இந்தக் கொடுப்பனவுகள் அடுத்த வருடம் ஜனவரி 1 முதல் பெப்ரவரி 28 வரை வழங்கப்படும் என கூறப்படுகின்றது.

இந்த தொகை பத்து சமமான மாதாந்திர தவணைகளில் வசூலிக்கப்படும் என்றும், வருடாந்திர வட்டி 8 சதவீதமாக வசூலிக்கப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.