
கடந்த 09ஆம் திகதி முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் (12) உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அதே திசையில் பயணித்த கனரக வாகனமொன்றுடன் மோதி விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த அன்ரன் செல்வராசா திலைக்சன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், புதுக்குடியிருப்பு இரணைப்பாலை சென் அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்தின் உதைபந்தாட்ட வீரராகவும், முல்லைத்தீவு மாவட்டத்தின் உதைபந்தாட்ட நடுவராகவும் செயற்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்துடன் தொடர்புடைய கனரக வாகனமும் அதன் சாரதியும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, வீதி போக்குவரத்து பொலிஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபரான சாரதி கடந்த 10ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் வழக்கின் மேலதிக விசாரணை இன்று (13) நடைபெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





