
மெரீனா படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன் தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது டாணா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.
தற்போது இதன் படப்பிடிப்பு நோர்வேயில் நடக்கிறது. சிவகார்த்திகேயனும், படக்குழுவினரும் அந்த நாட்டுக்கு சென்றனர்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் கார் விபத்தில் சிக்கி படுகாயமுற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக நேற்று செய்திகள் பரவியது. பத்திரிகை அலுவலகங்களுக்கு நிறைய பேர் போன் செய்து விசாரித்தனர்.
இது குறித்து சிவகார்த்திகேயனிடம் தொடர்பு கொண்டு கேட்ட,
நான் விபத்தில் சிக்கியதாக வதந்தி பரவி உள்ளது. எந்த விபத்திலும் சிக்கவில்லை. ஏராளமானோர் எனக்கு போன் செய்து விபத்து பற்றி விசாரித்தனர்.
இதனால் எனது செல்போனை சுவிட்ச் ஓப் செய்து விட்டேன். இந்த வதந்தி எங்கிருந்து கிளம்பியது என்று எனக்கு தெரியவில்லை. டாணா படத்துக்காக பாடல் காட்சியொன்றை படமாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று அவர் கூறினார்.





