கோர விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!!

211

மிஹிந்தலை பொலிஸ் பிரிவின் மாத்தளை சந்தியில் உள்ள குருந்தன்குளம் பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார். விபத்தில் 23 வயதுடைய துலான் தனஞ்சய பீரிஸ் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் அனுராதபுரம்-மாத்தளை சந்தி நோக்கிச் செல்லும் E-23 வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் வீதியின் இடது பக்கத்தை விட்டு விலகி, கவிழ்ந்தமையில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகாயம் அடைந்த இளைஞன் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் சிகிச்சையின் பலனின்றி அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலையில் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த துலான் தனஞ்சய, குடும்பத்தில் ஒரே மகனாகும்.

பொதுப் பணியில் ஈடுபட்டு வரும் துடிப்பான இளைஞர் என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.