இந்தியாவில் அதிரடியாக கைதான இலங்கை தமிழ் யுவதி : விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

43

போலி கடவுசீட்டு மூலம் இந்தியாவிலிருந்து வர முயன்ற இலங்கை பெண் இந்திய மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரால் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 17ம் திகதி 26 வயதுடைய குறித்த இளம் பெண் இந்திய கடவுசீட்டு மூலம் இலங்கை வர முயன்றுள்ளார். அவரது கடவுசீட்டை ஆய்வு செய்தபோது, அது போலியானது என தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது அவர் இலங்கையை சேர்ந்தவர் எனவும் கடந்த 2024ம் ஆண்டு சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

திருச்சியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு, குடியேறியதும், அதன் பிறகு இந்திய இந்திய அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை பெற்று அதன் மூலம் இலங்கை செல்ல முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் இவரை கைது செய்து போலி கடவுச்சீட்டு, அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.