
கொழும்பு, புறக்கோட்டை, குணசிங்கபுர பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் இரண்டு பஸ்களுக்கு மத்தியில் மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து கடந்த வியாழக்கிழமை (18.12.2025) இடம்பெற்றுள்ளது. விபத்தில் எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மரங்களுக்கு அருகில் நிற்பதையோ பயணிப்பதையோ முடிந்த அளவு தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.





