
தென்னிலங்கையில் சம்பவித்த பேருந்து விபத்தில் 30 பேர் காயம் அடைந்துள்ள நிலையில், அதன் சாரதி தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை-பெலியத்த பிரதான வீதியில் ஹந்தபன்கொடெல்ல பகுதியில் இன்று பிற்பகல் வேளையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
வீரகெட்டிய பகுதியிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தும், மாத்தறையிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற டிப்பர் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளது.
டிப்பர் லொறியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 30 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்களை உடனடியாக திக்வெல்ல மற்றும் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியுண்டமையினால் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. இந்நிலையில் தப்பியோடிய பேருந்தின் சாரதியை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.





