வவுனியாவில் கிராம சேவையாரிடம் 25000 ரூபா கொடுப்பனவு கோரி கடமைக்கு இடையூறு : ஒருவர் விளக்கமறியலில்!!

680

வவுனியா நகரம் வடக்கு கிராம அலுவலகத்திற்கு கிராம சேவையாளரிடம் 25000 ரூபா கொடுப்பனவு கோரி கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

‘டித்வா’ புயலுக்கு பின்னர் வீடுகளை சீரமைப்பதற்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவு கிராம சேவையாளர்களுடாக வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அனைத்து கிராம சேவையாளர் பிரிவிலும் இவ் கொடுப்பனவுகளை கிராம சேவையாளர்கள் ஊடாக வழங்கி வருகின்றனர்.

வவுனியா நகரம் வடக்கு கிராம அலுவலகத்திற்கு சென்ற நபரொருவர் தனக்கு 25,000 ரூபா கொடுப்பனவு தர வேண்டுமென கிராம சேவையாளரின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் முகமாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் செயற்பட்டதாக தெரிவித்து குறித்த நபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

கிராம சேவையாளரின் முறைப்பாட்டிற்கமைய கைது செய்யப்பட்ட குறித்த நபர் பொலிஸாரினால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சமயத்தில் குறித்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்